… replace that section with this and be sure to replace YOURusernameHERE with your Twitter ID:

விஜய்க்கு சீமான் கொடுத்த உத்தரவாதம்!

Written By kesa on Sunday, January 30, 2011 | 5:13 AM

காவலன் வெற்றியடைந்த உற்சாகத்தில் இருக்கும் நடிகர் விஜய், சீமான் இயக்கத்தில் நடிக்கவுள்ள பகவலன் கதையில்தான் இப்போது ஆர்வமாக இருக்கிறாராம். புரட்சிகரமான படங்களை எடுத்து, வெற்றியும் கண்ட சீமானின் பகலவன் மூலம் தன்னை வெற்றி நாயகனாக தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற முடிவிற்கு வந்து விட்ட விஜய், பகலவன் படத்தின் ஒட்டுமொத்த கதையையும் கேட்டு விட்டார். இந்நிலையில் சமீபத்தில் சீமா‌னும், விஜய்யும் சந்தித்துக் கொண்டனர். அப்போது படத்தில் நடிக்கும் பிற நடிகர் - நடிகைகள், டெக்னீஷியன்கள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதித்துள்ளனர்.

மேலும் இச்சந்திப்பின்போது, சீமானிடம் விஜய் ஒரேயொரு வேண்டுகோள் வைத்துள்ளார். அதாகப்பட்டது, பகலவனை ஆரம்பிச்சுட்டா எங்கயும் பிரேக் இல்லாம முடிச்சிடணும். அதனால படம் முடியிற வரைக்கும் நீங்க சர்ச்சைக்குரிய விஷயங்கள் எதையும் பேச வேண்டாம். மீண்டும் ஜெயிலுக்கு போகிற நிலைமையும் வரக் கூடாது, என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகள், பிரச்னைகளில் சிக்கி விழிபிதுங்கி, ஒருவழியாக அதில் இருந்து மீண்டு வந்திருக்கும் விஜய்யின் வேண்டுகோளில் நியாயம் இருப்பதை உணர்ந்த சீமான், விஜய்யின் நம்பிக்கைக்கு உத்தரவாதம் அளித்திருக்கிறாராம்.

0 comments:

Post a Comment